இனி இந்நாட்டில் எந்தவொரு குடிமகனும் அகதி வாழ்க்கையை அனுபவிக்கக்கூடாது
“யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கை உலகத்தில் எங்கும் நடக்காத விதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் அனுபவித்த துன்பங்களை நாம் அறிவோம். இனிமேலும் இந்த நாட்டில் எந்தவொரு குடிமகனும் அகதி வாழ்க்கையினை அனுபவிக்க கூடாது” என்ற நோக்கமும் கொள்கையுடனும் நாமும் செயல்படுகின்றோம்.” இவ்வாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடமாகாண அபிவிருத்திக்கான செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் தெரிவித்தார்.
நிவாரண கிராமங்களில் தங்கியிருந்த 10,000 பேரை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் வைபவத்திற்கு தலைமை வகித்து பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பல்கலைக்கழக மாணவர்கள் தாம் இழந்த கல்வியை மீளவும் பெறும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். யுத்தம் காரணமாகவே இந்த நாடு நீரழிந்தது; பலரை பலிகொண்டது. இனிமேலும் யுத்த நடவடிக்கைகளுக்கு அல்லது பயங்கரவாத செயல்பாடுகளுக்கு துணைபோகாது நடந்து கொள்ள வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்களை விரைவில் குடியமர்த்த அனைத்து செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக அரசாங்கம் சகல வேலைத்திட்டங்களையும் பொறுப்புடன் செயற்படுத்துகின்றது. மிதிவெடிகளை அகற்றும் பணியினை படை வீரர்களும் நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளனர்.
மீளக் குடியமர்த்தும் அனைவருக்கும் சகல அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு அவர்கள் நிம்மதியும் சுதந்திரமும் கெளரவமுமாக வாழும் நிலை ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பமாகும் எனவும் அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply