தாய்லாந்தில் போர் கப்பல் கடலில் மூழ்கியதில் 6 பேர் பிணமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் பாங்சாபன் மாவட்டத்துக்கு அருகே தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எச்.டி.எம்.எஸ். சுகோதாய் என்ற அந்த போர்க்கப்பல் புயலில் சிக்கியது.
கப்பலில் 106 மாலுமிகள் பயணித்த நிலையில் கடுமையான புயலில் சிக்கிய அந்த கப்பலுக்குள் கடல்நீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் 3 போர் கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்களும் கடலில் தத்தளித்த மாலுமிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டன.
இந்த நிலையில் 75 மாலுமிகளை மீட்டனர். 31 மாலுமிகள் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர் 30 மாலுமிகள் மாயமானதாக கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து கடலில் தத்தளித்த மாலுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் மீட்பு பணியின்போது 6 மாலுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன 23 மாலுமிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கப்பல் மூழ்கி 2 நாட்களுக்கு மேல் ஆனதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply