சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தி

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005ம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.

இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply