பாதுகாப்பு செயலர் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய வும் முல்லைத்தீவு மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளு க்கு விஜயம் செய்தனர்.நேற்று முன்தினம் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்களை முல் லைத்தீவு கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த வரவேற்றார்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த வரவேற்பு இடம்பெற்றது. இதன்பின்பு, அங்கு படைவீரர்களால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது. அங்கிருந்து புதுக்குடியிருப்பிலுள்ள விஜபாகு படைப்பிரிவின் தலைமையகம் சென்றனர். அங்கும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர்; படைவீரர்களின் அர்ப்பணிப்பும், தியாகங்களையும் பாராட்டிப் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply