அரசியலுக்கும் பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டை காட்டி கொடுக்க வேண்டாம்: மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும், பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் காலியில் வேண்டுகோள் விடுத்தார். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நோக்கில் மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின் னரும் கூட தாயகத்திற்கு எதிராக பலவகைகளிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சுட்டிக்காட்டினார்.

தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு எதிராக இடம்பெறுகின்ற சூழ் ச்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்த ஒருசிலர் தகவல்களைத் திர ட்டி நாட்டைக் காட்டிக் கொடு க்க முயற்சி செய்கின்றார்கள். பெற்றுள்ள வெற்றியைப் பேணிப் பாதுகாப்பதென்பது பெரும் சிரமமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

காலி, யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டார். மெட்டரம்ப ஹேமரத்ன தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் வைபவமும், ‘புனருதய’ கலை விழா – 2009 நிகழ்வும் யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொட ர்ந்தும் உரையாற்றுகையில் :-

மனிதாபிமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் முழு மையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எந்தவொரு இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக முன் னெடுக்கப்பட்டதல்ல. மாறாக புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் பயனாக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் பயங்கரவா தம் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டு நாட்டுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தாயகத்திற்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற் காக படைவீரர்கள் 26 ஆயிரம் பேர் தங்களது உயிர்களை அர்ப்பணித்தார்கள். இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புடன் அடையப் பெற்றி ருக்கும் இவ்வெற்றியை அரசியல் லாபம் பெறுவதற்காக குறைத்து மதிப்பிட வேண்டாம். பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டு நாடு ஐக்கியப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது. பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டிருக் கும் நாட்டை இன, மத, கட்சி, மொழி, நிற பேதங் களுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாதுகாக்க வேண் டும். இது சகலரதும் பொறுப்பாகும்.

புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதாபிமான இரா ணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் எமது தாயகத்திற்கு எதிராகச் சூழ்ச்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன. அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளுவதற்காக சிலர் நாட்டைக் காட்டிக்கொடுக்க முய ற்சி செய்கின்றனர். ஆனால், நாம் அரசியல் செய்வதற்கு நாடு இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முதலில் உணர்ந்துகொள்வது அவசியம். அதனால் ஒவ்வொருவரும் தாய் நாட்டுக்கே முதலிடமளிக்க வேண்டும். நாட்டைக் காட்டிக்கொடுக்கக் கூடாது.

பாராளுமன்றத்தில் சிலர் எழுப்புகின்ற கேள்விகள் என்ன நோக்கத்திற்காக? யாருடைய தேவையை நிறை வேற்றுவதற்காக எழுப்பப்படுகின்றன என்பதை நாமறிவோம். சிலர் பணத்திற்காக எதையும் செய்யத் தயாராக இரு க்கின்றார்கள். அவர்களுக்கு பணமே முக்கியம். இவ் வாறான சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றார் கள். பாதாள உலகம் கூட பணத்திற்காகவே இயங்கு கின்றது. இந்நாட்டுக்கு எதிராக தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சூழ்ச்சிகள் இடம்பெறக் காரணம் எமது படையினர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அடைந்திருக்கும் வெற்றியேயாகும். இதனை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நாட்டு மக்கள் மத்தியில் தாயகம் மீதான பற்று அதிகரித்திருக் கின்றது. தேசியக் கொடிக்கு முன்னொருபோதுமே இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின் றது.

தாயகத்தின் மீது அன்பும், பற்றும் கொண்டவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்களை நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்ன அபிவிருத்தி செய்தாலும் அவை பிரயோசனமற்றதாகிவிடும் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்களான டப்ளியூ. டி. ஜே. செனவிரட்ன, பியசேன கமகே, ஹேமகுமார, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, பிரதியமை ச்சர் லயனல் பிரேமசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply