மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா 5 மில்லியன் டொலர் உதவி
வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியா ஐந்து மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும், புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஊடாகவும் இந்நிதி மூலம் பருவ பெயர்ச்சி மழை காலத்திற்கு முன்னரான அவசர மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன. அதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவென யுனிசெப் ஊடாக 5.25 மில்லியன் டொலர்களையும் அவுஸ்திரேலியா ஏற்கனவே வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply