இலங்கைக்கு அச்சமின்றி சுற்றுலா செல்லமுடியும்: பிரித்தானியா
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகள் அச்சமின்றி செல்ல முடியும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கைக்கான விஜயம் ஆபத்தாக அமையலாம் என பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்து வந்தது. இதன் காரணமாக இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்தது. எனினும், தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த காரணத்தினால் இலங்கைக்கான பயணங்களை மேற் கொள்வதில் ஆபத்தில்லை என அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் பாரியளவு பயங்கரவாத அச்சுறுத்தல் தற்போது நிலவவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply