தலீபான் தலைவர் முல்லா ஒமர் சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தாரா?

தலீபான் தலைவர் முல்லா முகமது ஒமருக்கு சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா தன் நாட்டில் புகலிடம் கொடுத்து இருப்பதாக ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்தும், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயின் வற்புறுத்தலின் பேரிலும் சவுதி மன்னர் அப்துல்லா, தலீபான் தலைவருக்கு தஞ்சம் கொடுத்தார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இந்த செய்தியை சவுதி அரசின் வெளிநாட்டு இலாகா செய்தி தொடர்பாளர் மறுத்து இருக்கிறார். இது முழுக்க, முழுக்க உண்மையில்லாத செய்தி என்று அவர் கூறி இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply