நளினி,சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிட்டார்
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, தன்னை விடுதலை செய்ய கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் வேலூர் மகளிர் சிறை அதிகாரி ஜெயபாரதி அளித்த உறுதிமொழியின் பேரில் அவர் இன்று காலை உண்ணாவிரதத்தை கைவிட்டார். நளினி விடுதலை குறித்து ஆராய அரசு கமிட்டி ஒன்று அமைத்திருந்தது. இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
வேலூர் பெண்கள் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயபாரதி நளினிக்கு அளித்த உறுதியின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதே போல் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ் நேற்றிரவு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இவர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply