நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுள் வைத்தியர் போல் நடித்து, ஒருவரிடம் 70,000 ரூபாவை பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் அவர் வத்துபிட்டியல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply