அமெரிக்காவில் வங்கியில் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு : 4 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இருப்பிலும் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன. அவ்வகையில், கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லி நகரத்தில் உள்ள பழைய தேசிய வங்கியைக் குறிவைத்து இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளான்.

இதையடுத்து போலீசார் அந்த வங்கியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரும் இறந்துவிட்டான். அந்த நபர் வங்கியின் முன்னாள் ஊழியராக இருக்கலாம் என தெரிகிறது. அந்த நபர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டானா? அல்லது அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டானா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் வங்கிக் கட்டிடத்திற்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி கவர்னர் ஆண்டி பெஷீர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply