தென்கொரியாவில் காட்டுத்தீயில் 44 வீடுகள் சாம்பல்

தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தன. 6 ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே மீட்பு படையினர் அங்கிருந்து சுமார் 300 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்த தீ விபத்தில் 44 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply