அநுராதபுரத்தில் புலி உறுப்பினர் நால்வர் சுட்டுக் கொலை
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஹொரவப்பொத்தானையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும் நால்வரை பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இந்தப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக சிவிலியன்கள் வழங்கிய தகவலையடுத்து இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply