பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் லாகூர் புலனாய்வு மையத்தில் தாக்குதல் ; 24 பேர் பலி

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள மத்திய புலனாய்வு அலுவலகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சகிதமாக சுட்டபடி நுழைந்தனர். எதிர்த்து சண்டையிட்ட போலீசார் , பொதுமக்கள், பயங்கரவாதிகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல அதிகாரிகள் அந்த அலுவலகத்திற்குள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். லாகூரில் 4 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தால் பாகிஸ்தானில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பு, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையக அலுவலகம் முற்றுகை முயற்சி, மார்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு இப்படி நடந்த பல தாக்குல்களில் இது வரை 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று  பயங்கரவாதிகள் துப்பாக்கி சகிதமாக லாகூரில் உள்ள மத்திய புலனாய்வு அலுவலகத்தில் நுழைந்தனர்.

இந்நேரத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 போலீஸ்காரர்கள், பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.  இந்த அலுவலகத்தில் பயங்கரவாதிகள் அதிகாரிகள் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை நடத்தினர்.

போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல்: மத்திய புலனாய்வு அலுவலகத்தில் தாக்குதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில் முன்னாவான் டிரைனிங் சென்டரிலும், எலைட் போலீஸ் ஸ்டேஷனிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். லாகூர் நகரம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. இதற்கிடையில் கோஹத்நரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் காரை மோதச்செய்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் நடந்த இன்றைய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply