நிவாரணப் பொருட்களை மீண்டும் இன்று அனுப்பி வைக்க நடவடிக்கை

வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருட்களடங்கிய 20 லொறிகளையும் மீண்டும் இன்று அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ்  தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து வன்னிப் பிரதேசத்துக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற 20 லொறிகளும் பலத்த மழை, பாதைகள் சேதம் காரணமாக நேற்று மீண்டும் வவுனியாவுக்குத் திரும்பி வந்தன.

இதேவேளை, யாழ்குடாவில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகள்,அரசாங்க நிறுவனங்கள்,வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டுக்குப் பின் இந்த மாவட்டத்தில் இவ்வாறானதொரு மழை வீழ்ச்சி ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இன்று காலை எட்டு மணி வரையான காலப் பகுதிக்குள் இந்த மாவட்டத்தில் 389.8 மில்லி மீட்டர் மழை வீச்சி கிடைத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply