அரசுக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரசாரம்
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரசாரங்கள் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பிரதம பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் சரத் பொன் சேகா இன்னமும் இலங்கை இராணுவத்தின் உயர்பதவியை வகித்து வருகிறார். அவருக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டுவருவதாக ஆதாரமற்ற பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் பொய்யான பிரசாரங்களே.
சிலரது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவ்வாறான பிரசாரங்களை செய்வதுடன், மக்களையும் குழப்ப முயற்சிக்கின்றனர். இவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும். சில ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும், போஸ் டர்கள் மூலமாகவும் செய்யப்பட்டுவரும் பிரசாரங்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் இவ்வாறான பிரசாரங்களை செய்து வருவதை முன்னிட்டே பிரி கேடியர் உதய நாணயக்கார மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply