யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மக்கள் இம்மாத முடிவுக்குள் மீள்குடியேற்றம்
நிவாரணக் கிராமங்களிலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் இம்மாத முடிவுக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படுவரென மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்களை மீள்குடியேற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், மீள்குடியேறும் அம்மக்களின் சொந்த இடங்களில் உட்கட்டமைப்பு வேலைகளும் பூர்த்தியாகியிருப்பதாகவும் அமைச்சர் றிஷாட் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நிவாரணக் கிராமங்களிலுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்களையும் இம்மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை துரிதகெதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர். ஏனைய மக்களையும் மீள்குடியேற்றும் செயற்பாடு இதனடிப்படையில் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் றிஷாட் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply