இந்தோனேஷியாவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்துவர அரசு நடவடிக்கை

இந்தோனேஷியாவில் கைதான 260 இலங்கையர்களையும் விடுதலை செய்து இலங்கைக்கு திருப்பி அழை த்து வருவதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு மேற் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது. இவர்கள் குறித்து சர்வதேச புலம் பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் குறித்த இலங்கையர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட இவர்கள் கடந்த 11 ஆம் திகதி இந் தோனேஷிய கடலில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழில் உரையாற்றிய போதும் கைதான 260 பேரும் இலங்கையர்கள் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தோனேஷியாவிலுள்ள இல ங்கை தூதரகத்தினூடாக இவர்கள் பற்றிய விபரங்களை திரட்டவும் இவர்களை விடுவிக்கவும் தொட ர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கனடாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட சுமார் 76 வெளிநாட்டவர்கள் பசுபிக் கடலில் வைத்து நேற்று முன்தினம் (17) கைதாகியுள்ளனர். இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இவர்கள் குறித்த தகவல்களை திரட்டவும் வெளிவிவகார அமைச்சு நடவடி க்கை எடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply