நான் அரசன் அல்ல; நாட்டு மக்களின் பாதுகாவலன்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

‘நான் அரசன் அல்ல. நேற்றும் இன்றும் என்றும் நான் நாட்டு மக்களின் பாதுகாவலனே’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிண்ணியாவில் புதிதாக நிர்மாணி க்கப்பட்டுள்ள இலங்கையின் அதி நீளமான பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் வாழும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே. எமக்கிடையில் இன, மத, குல, பிரதேச பேதம் இனியும் இருக்க முடியாது. பயங்கரவாதம் எமது அன்னியோன்ய உறவை பிளவுபடுத்த முயன்ற போதும் அது பலிக்கவில்லை. எமது உறவை எவராலும் பிரிக்க முடியாது இதுவே யதார்த்தம்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இப்பகுதி மக்கள் பட்ட கஷ்டம் எமக்குத் தெரியும். அதேவேளை அந்நேரத்தில் ஐ. தே. க. என்ன செய்தது எல். ரி. ரி. ஈ. என்ன செய்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.மூதூர் மக்களை புலிகளின் பிடியிலிருந்து நாம் பாதுகாத்தோம்.

நோன்புப் பெருநாளைக்கு முன்பு அவர்களை மீளக் குடியமர்த்துவோம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். காத்தான்குடி பள்ளியில் இடம்பெற்றது போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் இனி நடக்காது. நாட்டிலுள்ள சகல இன, மத, மக்களும் எமது மக்கள். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பது எமது பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply