இந்திய அரசு வழங்கவுள்ள 500 கோடியில் வடக்கில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கை
இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவும் மடு – தலைமன்னார் மற்றும் ஓமந்தை – பளைக்கிடையிலான ரயில் பாதைகளை புனரமைக்கவும் ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு மற்றும் கலாசார நிலை யம் அமைக்கவும் பயன்படுத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
இதற்கான திட்ட அறிக்கை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் இது குறித்து இரு நாடுகளுக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா சுட்டிக்காட்டினார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:
இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த தமிழக எம்.பி.க்கள் குழு சர்வதேச சமூகத்திற்கு தெளிவான செய்தி யொன்றை முன்வைத்துள்ளது.
இடம்பெயர் ந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழக எம்.பி.க்களின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த உதவி கிடைக்கவுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்ற வேண்டுமென்பதே தமிழக எம்.பி.க்களின் பிரதான கோரிக்கையாகும். அந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 11 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply