நாடு பூராவும் 300 கைத்தொழில் பேட்டைகள் மூன்று இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு: அநுர பிரியதர்ஷன யாப்பா
நாடளாவிய ரீதியில் 300 கைத்தொழில் பேட்டைகளை அமைத்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக் களை வழங்க அரசாங்கம் தீர்மானி த்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டுடன் 8,000 கோடி ரூபா செலவில் இக் கைத்தொழில் பேட்டைகள் உருவாகவுள்ளதுடன் மேற்படி 300 கைத்தொழில் பேட்டைகளில் 214 ற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பு சாதன மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் அரசாங்கத்தின் கருத்திட்டத்தின் கீழ் மேற்படி கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படுவதுடன் இதற்கென இலங்கை முதலீட்டுச் சபைக்கு 337 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவற்றுள் 325 விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply