பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை பின்பற்றிய வழிமுறைகளை கடைபிடிக்க தாய்லாந்து அரசாங்கம் திட்டம்

தாய்லாந்தின் தென் பகுதியில் இடம்பெற்று வரும் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த இலங்கை பயன்படுத்திய யுத்த வழிமுறைகளை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தாய்லாந்து ஆராய்ந்து வருவதாகவும். இந்த விடயம் தொடர்பில் தாய்லாந்து பிரதமர் அப்சித் விஜய்வா, இலங்கைப் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கட்டமைப்புக்களை முடக்கியமை உள்ளிட்ட சகலவிதமான யுத்த அணுகுமுறைகள் பற்றியும் இலங்கையிடம் கேட்டறிந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட யுத்த அணுகுமுறை தாய்லாந்து கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு சிறந்த பாடமாக அமையும் என அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply