மடு பாசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள்

இரு வருட காலமாக மூடப்பட்டிருந்த  மன்னார் மடு கல்வி வலயத்திலுள்ள 11 பாசாலைகளில் இன்று முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மடு கல்விப் பணிப்பாளர் தெரிவித்துதுள்ளார். இந்தப் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்பட்பதையடுத்தே மேற்படி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றப்பட்ட மக்களிடையே உள்ள மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் ஆகியோர் அடையாளங் காணப்பட்டு முதற்கட்டமாக 59 ஆசிரியர்களின் பங்களிப்புடன் 11 பாசாலைகளிலும்;; கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகிறது. மோதல் காரணமாக மடு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் 2007 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply