இடம்பெயர்ந்த மக்களுக்கு சனாதிபதி அனுப்பிவைத்துள்ள செய்தி
வாழ்க்கையின் புதியதோர் ஆரம்பத்திற்கான நுழைவாயிலில் நீங்கள் நிற்கின்றீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையை உங்களுக்கேற்ற வகையில் ஆக்குவதற்காக எனது அரசாங்கம் நிறையவே செய்துள்ளது. மனிதர்களாக உங்களது கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில் தரமான வாழ்க்கைக்கான எல்லாத் தேவைகளையும் வழங்கியூள்ளது என சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கின் முல்லைதீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்படும் இடம்பெயர்ந்த மக்கள் ஒவ்வொரு வருக்கும் சனாதிபதி அனுப்பிவைத்துள்ள செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு சனாதிபதி அனுப்பிவைத்துள்ள செய்தி வருமாறு:
அன்புடையீர்
வாழ்க்கையின் புதியதோர் ஆரம்பத்திற்கான நுழைவாயிலில் நீங்கள் நிற்கின்ற இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நான் இதனை உங்களுக்கு எழுதுகின்றேன். இன்று நீங்கள் உங்கள் முன்னைய வீடு அமைந்திருந்த உங்களுக்கு மிகவும் பரிச்சயமான சூழலுக்கு அல்லது அதற்கு சமீபமாக வந்துள்ளீர்கள்.
உங்கள் குடும்பம் நீண்ட காலமாக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியது என்பதை நான் அறிவேன். இவை ஈவிரக்கமற்ற ஒர் அமைப்பு அதன் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உங்கள் மீதும் ஏனைய தமிழ் மக்கள் மீதும் திணித்த கஷ்டங்களாகும். இப்பயங்கரவாத அமைப்பு தமிழ் சமூகத்தின் ஏக விடுதலை வீரர்கள் தாங்களே என்றும் கூறிக்கொண்டனர். அவர்களின் உபாயங்கள் தோல்வியுற ஆரம்பித்ததும் நீங்கள் இடத்திற்கிடம் அலைந்து திரியவேண்டியதாயிற்று. உங்களுக்காக அனுப்பப்பட்ட உணவு மருந்து உட்பட ஏனைய அத்தியாவசியப் பொருட்கள்கூட உங்களுக்கு மறுக்கப்பட்டன. உங்கள் பிள்ளைகளிடமும் முதியோர்களிடமும் ஆயுதங்கள் திணிக்கப்பட்டு இப்பயங்கரவாதப் படையில் சேருமாறு கட்டாயப்படுத்தப்பட்டது.
இது எமது நாட்டு தமிழ் மக்களின் அபிலாஷையாக இருக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். இறுதியாக உங்களுக்காக என்று கூறிக்கொண்டு உங்கள் மக்களின் இரத்தத்தையே சிந்தவைத்தவர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் மனிதக்கேடயங்களாகவும் பணயக்கைதிகளாகவும் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் உங்களது சொந்த தாய் நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களாக ஆக்கப்பட்டீர்கள்.
அந்த இருள்சூழ்ந்த காலம் மறைந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் என்றவகையில் நீங்கள் எதிர்நோக்கிய தற்காலிக கஷ்டங்களும் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. உங்கள் குடும்பம் நண்பர்கள் சகிதம் புதியதோர் வாழ்க்கைக்கு மீண்டுவந்துள்ளீர்கள். நீங்கள் எதிர்காலத்தின் புதியதும் சாதகமானதுமான சவால்களை எதிர்நோக்குவீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையை உங்களுக்கேற்ற வகையில் ஆக்குவதற்காக எனது அரசாங்கம் நிறையவே செய்துள்ளது. மனிதர்களாக உங்களது கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில் தரமான வாழ்க்கைக்கான எல்லாத் தேவைகளையும் வழங்கியுள்ளது.
இன்று உங்களிடமுள்ள மிக உயர்ந்த சொத்து உங்களால் மிகச்சிறந்த முறையில் பேணிப்பாதுகாக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளே. உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இப்புதிய வசதிவாய்ப்புகளில் இருந்து பயனடையும் வகையில் உங்களால் வழிகாட்டப்படுவதையும் மேலும் அவர்கள் மீண்டும் ஒருபோதும் போலியான தூதுவHகளாலும் இரட்சகர்களாலும் பிழையாக வழிநடாத்தப்படுவதை
அனுமதிக்காதிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டிய தருணம் இதுவாகும். நீங்கள் ஒன்றுசேர்ந்து புதியதோர் வாழ்க்கையைக் கட்டியெழுப்பி சமாதானமும் நட்புறவும் நிலவும் இச்சூழலில் கிடைக்கின்ற பல வாய்ப்புக்களிலிருந்தும் பயனடைய முடியும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லாசியூடனான வளமான எதிர்காலம் கிடைக்க வேண்டுமெனவும் உங்கள் வெற்றிக்கனவுகள் நனவாக வேண்டுமெனவும் எமது தாய்நாட்டில் ஒரே குடும்பமாக நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து வாழவேண்டுமெனவும் நான் பிரார்த்திக்கின்றேன்.
உண்மையுள்ள
மஹிந்த ராஜபக்ஷ
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply