iரெயிலில் பயணம்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ரஷியா சென்றார்
ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சிறப்பு ரெயிலில் புறப்பட்டார். கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கிம் ஜாங் அன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
அவரது தனிப்பட்ட இந்த ரெயிலில் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் இருந்தனர். இந்த ரெயிலானது நவீன ஆயுதங்கள், செயற்கைக்கோளுடன் தொடர்பில் இருக்கும் கருவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இந்த ரெயிலில் ரஷியா சென்றடைந்த கிம் ஜாங் அன் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அப்போது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, ரஷியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்தால் வடகொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இவர்களது சந்திப்பு தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply