ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற கொடூரமான குண்டுத் தாக்குதலில் சுமார் 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
2007ம் ஆண்டுக்குப் பின்னர் ஈராக்கில் இடம்பெற்ற மிக மோசமான குண்டுத் தாக்குதல் சம்பவம் எனக் குறிப்பிடப்படுகிறது.பக்தாத்தின் இரண்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சுமார் 160 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 520 பேர் காயமடைந்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பச்சை வலயப் பகுதியில் அமைந்துள்ள நீதி அமைச்சு மற்றும் மாகாண அரசியல் விவகார அலுவலகம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுடன் சிரியா அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கக் கூடுமென ஈராக் குற்றம் சுமத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஈராக், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் இடம்பெற்ற பிரதேசத்தை ஈராக்கிய பிரதமர் நோராய் மல்லிக்க நேரில் பார்வையிட்டுள்ளார். இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் மூலம் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளை குழப்பிவிட முடியாதென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply