இரண்டாம் கட்ட கடன் வசதியை பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை: அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாதென, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வுக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட இந்தக் கடன் திட்டத்திலிருந்து இடையில்

விலகுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லையெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“இன்று நாங்கள் ஆரம்பித்த மீளாய்வுக் கலந்துரையாடல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நடைபெறுமென்பதுடன், இந்தக் கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் ஐ.எம்.எப். இன் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு நிதிச் சந்தையில் பிரவேசிப்பதற்கான சக்தியை சர்வதேச நாணய நிதியம், இதனூடாக இமக்கு பெற்றுத் தருகின்றது.

அரசாங்கமென்ற ரீதியில் நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்றி இருக்கின்றோம். சில விடயங்களில் நீதிமன்ற செயற்பாடுகள் இடம்பெற்றமையால், சில சட்டமூலங்களை நிறைவேற்ற சிறிது தாமதம் ஏற்பட்டது. இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்ளவும் அதனூடாக முன்னோக்கிச் செல்லவும் எமக்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட இந்தக் கடன் திட்டத்திலிருந்து இடையில் விலகுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லையென்பதுடன், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply