ஜனாதிபதியின் செயல் நாட்டிற்கு அவசியமா? : சுரேஸ் பிரேமச்சந்திரன்

நாடு வங்குரோத்தில் இருக்கும் போது ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது அவரது செயற்பாடுகளை தெளிவாக எடுத்துக் காட்டிகின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை கட்டியெழுப்ப நிதி நிறுவனங்கள் கடன் உதவி கேட்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்திலே ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் வௌிநாட்டு அழைத்து சென்றது தேவை தான? எனவும்,

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்பவர்களுக்கு பால் கலக்காத தேனீர் (Plain Tea) வழங்கும் நிலை இத்தகைய அநாவசிய செயல் அவசியமா? என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply