தேர்தல் பற்றி சிந்திக்காது நாட்டை சிந்தித்து தீர்மானங்கள் எடுப்பதே அரசின் கொள்கை: ஜனாதிபதி

தேர்தல் பற்றிச் சிந்திக்காது நாட்டைப் பற்றிச் சிந்தித்து தீர்மானங்களை மேற் கொள்வதே அன்றும் இன்றும் எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் கொள்கையாக விருக்கு மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக மேற் கொள்ளப்படும் தீர்மானங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தாம் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடளாவிய உள்ளூராட்சிச் சபை பிரதிநிதிகள் பங்கேற்ற முக்கிய கல ந்துரையாடலொன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரி வித்துள்ள ஜனாதிபதி; நாட்டின் நலனை முன் கொண்ட தீர்மானங்களை மேற்கொள்வதே அரசாங்க த்தின் கொள்கையெனவும் குறி ப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான மைத்திரி யால சிரிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித அபேகுணவர்தன, குணரத்ன வீரக்கோன், ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகர் பெஷில் ராஜபக்ஷ எம். பி. உட்பட முக்கிய ஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

நாம் இன்றைய தினத்தை விட நாளையைப் பற்றி சிந்தித்து எம் எதிர்கால சந்ததிக்குச் சிறந்த நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

நாளை பிறக்கப்போகும் பிள்ளையைப் பற்றிச் சிந்தித்து இந்நாட்டை அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும் எம்மை அர்ப்பணிக்க வேண்டியது அவசியம்.

மக்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் செயற்றிட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எமது நாட்டின் ஒரு பகுதியை பய ங்கரவாதிகளுக்கு எழுத்து மூலம் வழங் கியிருந்த காலகட்டமொன்றிலேயே இதற்கு முன்னர் நாம் கூடியிருந்தோம். எனினும் இன்று நாம் வெற்றிகொண்ட ஐக்கியமான நாட்டில் கூடுகின்றோம். நாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரத்தை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அப்பொறுப்பு இன, மத, குல, சமூக பேத மின்றி சகலருக்குமுரியதாகும். நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை மீண் டும் பின்னடையச் செய்வதற்கு எத்தகைய சக்திக்கும் இடமளிக்கப்போவ தில்லை.

கிராமிய மக்கள் அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர். அற்ப காரணங்களைக் காட்டி அவர்களின் நம்பிக்கையை எவருக்கும் உடைத்துவிட முடியாது.

கிராமிய மக்களின் தேவைகளை இனங்கண்டு தொடர்ந்தும் கிராமியப் பகுதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்புக்கள் பிரதேச சபை பிரதி நிதிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளனெவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது அளவ்வ பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர்களான எச்.எம். தர்மரத்ன பெரேரா, கே.பி. சுமதிபால ஆகியோர் ஜனாதிபதியின் செயற் பாடுகளுக்குப் பூரண ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியில் இணைந்துகொண்டமை குறிப் பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply