சனல் 4இன் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்பில் நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்
இந்த தாக்குதல்களுக்கு, அரச அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த, ‘விசில்ப்ளோயர்’ என்ற தகவலளாலரான அசாத் மௌலானாவின் கூற்றுகளை ஆதரிக்க நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஆவணப்படத்தின் இயக்குனர் தோம் வோக்கர் மற்றும் தயாரிப்பாளர் பென் டி பியர் ஆகியோர், ஜெனீவாவில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சனல் 4 ஆவணப்படத்தின் படி, வெளிநாட்டில் தஞ்சம் கோரிய அசாத் மௌலானா, 2018இல் புத்தளத்தில் தற்கொலை குண்டுதாரிகளுக்கும், இலங்கையின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை நேரில் பார்த்துள்ளார்.
இருப்பினும், சஹ்ரான் ஹாசிம் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்கான எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என்று, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான பேஸ்மென்ட் பிலிம்ஸின் நிறுவனர் தோம் வோக்கர், கூறியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply