சகல நிலையங்களிலும் ஒரே விலையில் எரிபொருட்கள்

நாட்டிற்குள் எரிபொருட்களை விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களையும் எரிபொருட்களின் விலைகளை ஒரே விதத்தில் மு ன்னெடுத்துச் செல்லாவிட்டால் அதுதொடர்பில் கடுமையான நடவடிக்ைக எடுக்கப்படுமென எரிபொருள் பகிர்ந்தளிப்பாளர்கள் சங்கம் அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

அடுத்துவரும் எரிபொருள் விலை விருத்தங்களின் போது, அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையின் கீழ் அல்லது போட்டித்தன்மைக்கிணங்க சிறு வித்தியாசங்களின் கீழ் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டுமென்றும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் சங்கம் என்ற வகையில் கடும் நடவடிக்ைக எடுக்கப்படுமென்றும் அந்த சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பகிர்ந்தளிப்பை நிறுவனத்தை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்வதற்கு ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை உருவாக்கவேண்டுமென எரிசக்தி மின்சக்திஅமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள நிலையில், மிக விரைவில் அந்த நிறுவனத்தை ஸ்தாபிக்கவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply