இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : பத்து இலட்சத்தை கடந்தது
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு இறுதிக்குள் 155,000,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை இலக்காக கொண்டுள்ளது.
கடந்த வாரம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, கடந்த வருடங்களில் எதிர்கொண்ட சவால்களில் இருந்து உள்ளூர் சுற்றுலாத் துறை மீண்டு வருவதன் மூலம், ஆண்டு இறுதி இலக்கை இலங்கைகடந்து விடும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply