நேபாளம் சென்ற ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பெரு வரவேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நேபாளம் சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்களிக்கப்பட்டது. இலங்கை நேரப்படி நேற்று நண்பகல் 1.40 அளவில் நேபாள காத்மண்டு நகரிலுள்ள த்ரிபுவான் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு அந்நாட்டின் பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச் சருமான சுஜாதா கொய்ராலா, பாராளுமன்ற மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி மினேத்ரா ரிஜல் ஆகியோர் உள்ளிட்ட உயர்பட்ட குழுவினர் வரவேற்பளித்தனர்.

நேபாளம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தஹல்லை (பிரச்சண்டா) சந்தித்து பேச்சு நடத்தினார். சமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டில் 30 வருடங்களாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைககள் முழு உலகிற்கும் சிறந்த முன்னுதாரணமாகுமென முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட அதேசயம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறந்த முறையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் புஷ்பகமல் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார். நேபாளம், இலங்கை ஆகிய இரு நாடுகளிடையே நீண்டகாலமாக நிலவி வரும் கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் தன்னுடைய இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுப்பெறுமென தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இவ் விஜயத்தில் ஜனாதிபதியுடன் அவரது பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, நிமல் சிறிபால டி சில்வா, திஸ்ஸ கரலியத்த, மேர்வின் சில்வா, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத், சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் சஜித்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் சென்றுள்ளனர். நேபாளத்தில் லும்பினி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “ஸ்ரீலங்கா மஹாவிகாரை”யினை ஜனாதிபதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply