FaceBook பதிவு தொடர்பான குற்றச்சாட்டு வழக்கிலிருந்து ரம்ஸி ராசிக் முழுமையாக விடுவிப்பு: நடந்தது என்ன?

ICCPR சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு 5 மாதங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த சமூக செயற்­பட்­டாளர் ரம்ஸி ராசிக் கடந்த வாரம் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் முற்­றாக விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்,

நான் கைது செய்­யப்­பட்ட கால­கட்டம் இன­வாதம் உச்ச நிலையில் இருந்த கால­மாகும். ஜனா­தி­பதி தேர்தல் நடந்து முடிந்­ததும் இன­வாத அமைப்­பு­க­ளினால் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பெரும் அச்­சு­றுத்தல் இருந்­தது. இன­வா­திகள் இக்­காலப் பகு­தியில் முஸ்­லிம்கள் தொடர்பில் பல பொய் பிர­சா­ரங்­களை சமூக ஊட­கங்கள் மூலமும் ஏனைய ஊட­கங்கள் மூலமும் பரப்­பிக்­கொண்­டி­ருந்­தார்கள். இக்­கா­லத்­திலேயே நான் கைது செய்­யப்­பட்டேன்.

2020 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் நாட்டில் கொரோனா வேக­மாக பர­வி­யது. அக்­கா­லத்தில் நான் பதி­வொன்­றினைக் கண்டேன். அந்தப் பதிவில் முஸ்லிம் சமூகம் வேண்­டு­மென்றே சிங்­கள மக்­க­ளி­டையே கொரோ­னாவைப் பரப்­பு­கி­றார்கள் என்னும் கருத்து குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இந்த தவ­றான பதி­வுக்கு எதி­ராக முஸ்­லிம்கள் சிந்­தனா ரீதியில் போராட்டம் நடத்­த­வேண்­டு­மென எனது சமூக வலைத்­தள கணக்கில் பதி­வொன்­றினை இட்டேன்.

எனினும் எனது பதிவில் ‘இவற்­றுக்­கெல்லாம் எதி­ராக முஸ்லிம் மக்கள் கற்­பனா ரீதி­யி­லான போராட்டம் அல்­லது ஜிஹாத் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று எழு­தி­யி­ருந்ததாகவும் இதனால் நான் முஸ்­லிம்­களை யுத்­த­மொன்­றுக்கு அல்­லது போராட்­டத்­துக்கு தூண்­டு­கிறேன் என்றும் குற்றம்சாட்டி என்னை கைது செய்­தார்கள்.

‘ஜிஹாத்’ என்ற சொல்லை அடிப்­ப­டை­யாக வைத்து சிஐ­டி­யினர் என்னைக் கைது செய்­தார்கள். இரு சிஐடி அதி­கா­ரிகள் அப்­போது என்னைத் தாக்­கி­னார்கள். சிவில் மற்றும் அர­சியல் உரிமை தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை சட்­டத்தின் கீழ் (ICCPR) என்னை ரிமாண்ட் சிறையில் அடைத்­தார்கள்.

ஐசி­சி­பிஆர் சட்டம் மிகவும் சிறந்த சட்­ட­மாகும். இச்­சட்டம் அர­சியல் உரி­மை ­பேச்சு உரிமை மற்றும் மத கலா­சார உரி­மையின் சுயா­தீ­னத்தை உறுதி செய்­வ­தற்­கா­கவே கொண்டு வரப்­பட்­டது. ஆனால் இச்­சட்டம் இலங்­கையில் முற்­றாக துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு வரு­கி­றது. இந்த உரி­மை­க­ளுக்கு எதி­ரா­கவே இச்­சட்டம் இலங்­கையில் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

மக்­களின் மத உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்ட இச்­சட்டம் இலங்­கையில் மக்­களின் உரி­மை­களை அடக்­கு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

ஐசி­சி­பிஆர் சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இச்­சட்­டத்தின் கீழ் எவரும் கைது செய்­யப்­பட்டால் நீதிவான் நீதி­மன்­றுக்கு பிணை வழங்கும் அதி­கா­ர­மில்லை. மேல் நீதி­மன்­றத்­திலே பிணை பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு பிணை பெற்­றுக்­கொள்ள சுமார் 3 மாத காலம் செல்லும்.

நான் இச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டதால் 5 ½ மாத காலம் சிறையில் இருக்க வேண்­டி­யேற்­பட்­டது. அதன் பின்பே பிணை வழங்­கப்­பட்­டது என்றார்.

ரம்­ஸி­ ரா­சிக்கின் கைது தொடர்­பான வழக்கு 3 வருட காலத்தின் பின்பே முடி­வுக்கு வந்­துள்­ளது. இவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு சாட்­சிகள் எது­வு­மில்­லாத கார­ணத்­தினால் வழக்­கினை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு எவ்­வித ஆட்­சே­ப­னையும் இல்லை என சட்­டமா அதிபர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­த­தை­ய­டுத்தே அவர் விடு­தலை செய்­யப்­பட்டார். சிஐடி யினரால் இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

கொரோனா சட்ட விதி­களின் கார­ண­மாக அவ­ருக்கு அவ­ரது சட்­டத்­த­ர­ணி­யையோ குடும்ப அங்­கத்­தி­ன­ரையோ சிறையில் சந்­திக்க சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை.

சிறைச்­சா­லை­யிலும் விழுந்து அவ­ரது கை முறிந்த நிலை­யிலும் அவ­ருக்கு முறை­யான சிகிச்சை கிடைக்­க­வில்லை. இதனால் தனது கையில் தொடர்ந்தும் வேத­னை­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கிறார். ரிமாண்ட் சிறைச்­சா­லையில் தான் உள­ரீ­தி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் கூறினார். ரிமாண்ட் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து 5 ½ மாதங்­களின் பின்பு பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

“நான் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்தேன். அப்­போது என்னால் தேவை­யான சிகிச்­சை­களை பெற­மு­டி­யா­ம­லி­ருந்­தது’’ என்றார்.

கடந்த 21 ஆம் திகதி தான் குற்­றங்­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் அவர் கருத்து தெரி­விக்­கையில்;

இந்தப் பொய் குற்­றச்­சாட்­டு­க­ளினால் நானும் எனது குடும்­பமும் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டது. குடும்ப அங்­கத்­த­வர்கள் தாமும் பிரச்­சி­னைக்­குள்­ளாக்­கப்­ப­டுவோம் என அச்­சத்தில் இருந்­தார்கள். எனது பிள்­ளைகள் பாட­சாலை செல்­ப­வர்கள். அவர்­களின் கல்­வியில் எனது கைது பெரும் தாக்­கத்தைச் செலுத்­தி­யது. மூன்று வரு­ட­கா­ல­மாக சிஐ­டி­யினர் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்திக்கொண்டு வந்தாலும் எனக்கு எதிராக எந்த சாட்சிகளையும் ஆஜர்படுத்த அவர்களால் முடியாமற்போனது.

‘நான் தொடர்ந்தும் இவ்வாறான பொய் பிரசாரங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். சமூக ஊடக செயற்பாட்டாளர் என்ற வகையில் பொய்யான இனவாத பிரசாரங்களுக்கு எதிராக நிச்சயம் குரல் எழுப்புவேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply