ஐக்கியப்படுவது மாத்திரம் தீர்வுக்கு வழி வகுக்காது
கடந்த சில தினங்களாக இடம் பெற்றுவரும் நிகழ்வுகள் இன பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சி மீண்டும் பின்தள்ளப்பட்டுவிடுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிப்பனவாக இருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிரணித் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் கருத்துகளும் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் இச்சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றன.
உளவியல் ரீதியாக மக்களைக் கட்டிப் போடுவதற்கான முயற்சியே பொது வேட்பாளர் பற்றிய பிரசாரம். பொது வேட்பாளர் பற்றிப் பேசுபவர்கள் அவர் யார் என்பது பற்றி எதுவும் கூறுவதில்லை. முன்னாள் பிரதம இராணுவத்தளபதியின் பெயரையும் முன்னாள் பிரதம நீதியரசரின் பெயரையும் கோடி காட்டுகின்றார்கள். ஆனால் அவர்கள் இந்த ஊகங்களை நிராகரித்துவிட்டார்கள்.
பொது வேட்பாளர் என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம் எதிரணியின் வெற்றிவாய்ப்பு பற்றிய நம்பிக்கையை மக்களிடம் தோற்றுவித்து அவர்களை எதிரணியின் பக்கம் கவர்வதே நோக்கம் போல் தெரிகின்றது. போகும்போக்கைப் பார்த்தால் பொது வேட்பாளர் என்பது கற்பனை என்றே எண்ணத் தோன்றுகி ன்றது. ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கப்போவதாகக் கூறும் கூட் டமைப்பு இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிப் பேசாமலிரு ப்பதற்கும் இப்பிரசாரம் வாய்ப்பாக உள்ளது. உத்தேச எதிரணிக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி எதுவுமே பேசாமலிரு ப்பதை இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பொன்று அமைவது மேலோட்டமான பார்வையில் நல்ல முயற்சியாகவே தோன்றும். அது நல்ல முயற்சியா இல்லையா என்பது அக் கூட்டமைப்பின் செய ற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. தமிழ் பேசும் கட்சிகள் ஐக்கி யப்படுவதால் மாத்திரம் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட்டுத் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தன. அதன்பின் மேலும் சில கட்சிகளை உள்ளடக்கித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. இவற்றினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை.
இவ்விரு ஐக்கிய அமைப்புகளும் தவறான அணுகுமுறையைப் பின்பற்றி யதால் இனப்பிரச்சினை சிக்கலாகியதேயொழியத் தீர்வுக்கு வழி பிறக்கவில்லை. எவ்வளவுதான் உறுதியான ஐக்கியம் ஏற்பட்டா லும் சரியான கொள்கையும் சரியான அணுகுமுறையும் இல்லா விட்டால் பலன் கிடைக்காது என்பதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உதாரணங்கள்.
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு இப் போது மேற்கொள்ளப்படும் முயற்சியில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பிரதான நோக்கமாக இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடன் நீண்ட காலமாக அணி சேர்ந்திருந்த இரண்டு கட்சிகளும் இக் கூட்டமைப்பில் இடம்பெறுகின்றன.
இவற்றுள் ஒரு கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவுள்ள கூட்டமைப்பிலும் அங்கத்துவக் கட்சியாகக் கையொப்பம் இட்டிருக்கின்றது. இவற்றைப் பார்க்கும் போது, தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பு எதிரணி அரசியலின் ஒரு அங்கமாக அமைகின்றதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது.
இன்றைய நிலையில் எதிரணி அரசியல் அலையுடன் செல்வதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இனப் பிர ச்சினைக்கான அரசியல் தீர்வை அணுகிச் செல்வதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. பதவியிலுள்ள அரசாங்கத்துட னான பேச்சுவார்த்தை ஒரு விடயம். சமகால யதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றுவது மற்றைய விடயம்.
எதிரணி என்னதான் கூட்டமைப்பை அமைத்தாலும் பதவி க்கு வருவது சாத்தியமில்லை. தமிழ்க் கட்சிகள் எதிரணி அரசியலில் பங்காளிகளாவது அரசியல் தீர்வுக்கான முயற்சி தள்ளிப் போகும் நிலையையே தோற்றுவிக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply