2 இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 17-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், மேலும் 2 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். அவர்கள் எகிப்து வழியாக மீட்கப்பட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள். விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 21-ம் தேதி 2 அமெரிக்க பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply