எல்ல வெல்லவாய பிரதான வீதி திறக்கப்பட்டது
கடும் மழை காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய பிரதான வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். எல்ல வெல்லவாய வீதி ரன்தெனிய பிரதேசத்தில் 6 மற்றும் 7 கிலோமீற்றர் கனுவிற்கு இடையில் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டது.
பல இடங்களில் வீதியின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்பட்டுள்ளதாகவும், வீதி திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எல்ல-வெல்லவாய வீதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பிரதேசமாக இருப்பதால், ஆபத்தான இடங்களில் நின்று உண்பது, புகைப்படம் எடுப்பது ஆபத்தானது எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply