மோதல் காட்சி சபாநாயகரிடம் கையளிப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கும் இடையிலான மோதல் தொடர்பான சிசிரிவி காட்சிகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிசிரிவி காணொளிகள், இந்த சம்பவம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் கடந்த 20ஆம் திகதி குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply