இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளரின் மனைவி, மகன், மகள் உட்பட குடும்பத்தவர்கள் பலர் பலி

இஸ்ரேலின் விமானதாக்குதலில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வைல் அல் டாடோவின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அல்ஜசீராவின் காசாவிற்கான குழுவின் தலைவர் வைல்அல் டாடோவின் மனைவி மகன் மகள் இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்து மத்திய காசாவில் நுசெய்ரட் அகதிமுகாமில் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இடம்பெற்ற  விமானக்குண்டுவீச்சு இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளரின் மனைவி மகன் மகள் உட்பட குடும்பத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்த பேரன் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்தான் என மருத்துவமனை அறிவித்துள்ளது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

வெள்ளை துணியால் போர்த்தப்பட்ட தனது மகனின் உடலின் முன்னால் பத்திரிகையாளர் கதறி அழுதபடி காணப்படும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

காசாவின் அல் அக்சா மருத்துவமனையிலிருந்து அவர் தனது பேரனின் உடலை துயரத்துடன் கொண்டுவரும் படமும் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட மகனிற்கு 15 வயது மகளிற்கு ஏழு வயது என அல்ஜசீரா  தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply