அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது : ஐ.நா
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்றுடன் 27-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகின்றது.
கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகின்றது.
எனவே, காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ,அதை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல், ஹமாஸ் போராளிகளை முழுமையாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து போரை தொடர்ந்து வருகின்றது.
சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில், காசா முனையில் அகதிகள் அதிகம் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 50 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, ஹமாஸ் போராளிகளின் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 195 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 777 பேர் காயமடைந்துள்ளதாகவும், 120-க்கும் அதிமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
‘அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply