துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி : கொஸ்வத்தையில் சம்பவம்
கொஸ்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் கொஸ்வத்த அஸ்வத்த பகுதியில் நேற்று புதன்கிழமை (08) துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றில் வெடிமருந்தை செலுத்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொஸ்கம அஸ்வத்த பிரதேசத்தின் புவக்பிட்டிய பகுதியில் வசிக்கும் 59 வயது நபராவார்.
இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply