அரச இல்லத்தில் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடிய கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசாங்க இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.

விருந்தினர்கள் மத்தியில் உரையாற்றிய கமலா ஹாரிஸ்,

“இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்க்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியை கொண்டாடுவது முக்கியம்” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ்,

“இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக, இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும்.

அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும்” என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply