ஜேர்மனியில் குழந்தைக்கு ஆபத்து என பொலிசாருக்கு கிடைத்த தகவல்

ஜேர்மன் கிராமம் ஒன்றில், ஒரு குழந்தைக்கு ஆபத்து என தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அங்கு விரைந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்துக்கு பின் சந்தேகத்துக்குரிய முக்கிய நபர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு ஜேர்மனியிலுள்ள Vieritz என்னும் கிராமத்தில், குழந்தை ஒன்றுடன் பதுங்கிக்கொண்டிருந்த ஒருவர், பொலிசாரை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அந்த வீட்டில், இரண்டு ஆண்கள், ஒரு குழந்தை, அதன் தாய் என நான்கு பேர் இருந்துள்ளார்கள். அந்த தாய் இரவில் அமைதியாக வெளியேறிவிட, கையில் துப்பாக்கியுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர் துப்பாக்கியால் சுடவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அந்த ஒரு ஆண் மட்டும் குழந்தையுடன் வீட்டிற்குள் பதுங்கிக்கொள்ள, வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், அந்த ஆண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், அந்த குழந்தைக்கும் உயிரிழந்த நபருக்கும் என்ன தொடர்பு, அந்த வீட்டில் என்ன நடந்தது, அவர் எதற்காக அந்தக் குழந்தையை பிடித்துவைத்துக்கொண்டார், அவர் எப்படி உயிரிழந்தார் என, விடை தெரியாத பல கேள்விகள் மட்டுமே தற்போதைக்கு எஞ்சியுள்ளன. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply