செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் விடுதலைப்புலிகளின் தலைவரின் மகளின் வீடியோ : அவர் உயிருடன் உள்ளதாக காண்பிக்க முயற்சி டெய்லிமிரர்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் விடுதலைப்புலிகளின் மகள் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக வீடியோஒன்றை தயாரித்து வருகின்றனர் இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அவர் உயிருடன் உள்ளார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கையை எச்சரித்துள்ளதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோவை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply