ஐ. தே. க கூட்டமைப்பில் தனிநபர்களும் கைச்சாத்து: அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் ஐக்கிய தேசிய முன்னணி கூட்ட மைப்பில் பாராளுமன்ற உறுப் பினர்கள் மனோ கணேசனையும் ரவூப் ஹக்கீமையும் தவிர ஏனையோர் தனிநபர் கூட்டணியினராவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்கவின் செயலாளரான பெண்ணொருவரும், மங்கள சமரவீரவின் செயலாளரும் கூட தனிக்கட்சியாக கூட்டமைப்பில் கைச்சாத்திட்டுள்ளார்க ளென்று கூறிய அமைச்சர் யாப்பா, மேலும் பல தனிநபர்களும் அதில் இருப்பதாக கூறினார்.
எமது கட்சிக் கூட்டமைப்பை ஒரு கூட்டமைப்பு என்றால் ஐக்கிய தேசியக் கட்சியினதை என்ன பெயரில் அழைக்கலாம்? ஐ. தே. க.வின் கூட்டமைப்பு பொய்யானது, அர்த்தமில்லாதது. பாராளுமன்றத்தில் ஜே. ஆர். ஜயவர்தன வுக்குக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட அறையில் வைத்துத்தான் கூட்டமைப்பைக் கைச்சாத்திட்டுள்ளார்களென்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply