ஜேர்மன் அரசு இரட்டைக் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றம் முன்வைக்கும் நாள் முடிவானது
டிசம்பர் 1ஆம் திகதி, ஜேர்மன் அரசு, இரட்டைக் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றம் முன்வைக்க உள்ளது. இம்மாதம், அதாவது நவம்பர் 9ஆம் திகதி மசோதா முன்வைக்கப்பட இருந்த நிலையில், ஒரு கட்சியினர் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில் யூத வெறுப்பு குறித்த கேள்வியை எழுப்பியதால் அது தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
தற்போது, என்ன நடந்தாலும், டிசம்பர் 1ஆம் திகதி, இரட்டைக் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றம் முன்வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், விவாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் இந்த மசோதாவை சட்டமாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.
சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால், ஜேர்மனியில் வாழ்வோர், ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமை வைத்திருப்பதன் மீதான தடை நீக்கப்பட்டுவிடும்.
இதற்கு முன்னிருந்தது போலில்லாமல், ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, வெளிநாட்டவர் ஒருவர் எட்டு ஆண்டுகள் காத்திருந்ததற்கு பதிலாக, இனி ஐந்து ஆண்டுகள் முடிந்ததுமே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். சில சிறப்பு சூழல்களில், மூன்று ஆண்டுகள் முடிந்ததுமே கூட, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்படும்.
வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், அவர்களுடைய பிள்ளைகள் தாமாகவே ஜேர்மன் குடியுரிமைக்கு தகுதி பெற்றுவிடுவார்கள்.
மேலும், 67 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, B1 மொழித்தேர்வு எழுதி வெற்றி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply