தெற்கில் திருடி வடக்கில் விற்றவர் கைது
முச்சக்கரவண்டியொன்றைத் திருடி அதனை யாழில் உள்ள நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்களத்தில் முச்சக்கர வண்டி ஒன்றினை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதை அடுத்து குறித் திணைக்களத்தினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பதிவுக்கு போலியான புத்தகத்தை வழங்கிய குற்றச்சாட்டில் பளை பகுதியை சேர்ந்த நபரை கைது செய்தனர்.
அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில், தனக்கு கிளிநொச்சியில் வாகன திருத்தகம் (கராஜ்) வைத்திருக்கும் நபரே, முச்சக்கர வண்டியை விற்பனை செய்ததாக கூறியதை அடுத்து, கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவரை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது , தனக்கு தென்னிலங்கையை சேர்ந்த நபரே விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply