மக்களின் நலன் குறித்து மன்னாரில் இன்று கலந்துரையாடல்
மன்னார் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாவட்டத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணிக்கு மன்னார் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சிறீரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் உதயராசாவினால் மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் பிரதிநிதியாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, ஜனாதிபதியில் ஆலோசகர் சாந்த பிரேமரத்ன,ஈரோஸ் அமைப்பின் தலைவர் ராஜா நாதன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் போது ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply