சிறீ ரெலோ செயலாளர் நாயகம் ப. உதயராசா மன்னாரில் நிகழும் மீள்குடியேற்றத்தை பார்வையிட விடத்தல் தீவு விஜயம்

சிறீ ரெலோ செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்னார் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாட்டத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (நவ. 08) காலை 10.30 மணிக்கு மன்னார் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று அவர் விடத்தல் தீவில் மீள்குடியேறவுள்ள மக்களை நேரடியாக சந்தித்து உரையாடினார். விடத்தல் தீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கும் விஜயம் செய்த அவர் மாந்தைப் பிரதேசத்தில் கடந்த வாரம் மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வுகள் எட்ட வழிசெய்வதாக உறுதியளித்தார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply