ஈரான் ராக்கெட்டை செலுத்தி சோதனை நடத்தியது
ஈரான் வெற்றிகரமாக ஒரு ராக்கெட்டை செலுத்தி சோதனை நடத்தியது. கவோஷ்-2 (ஆராய்ச்சி பயணம்) என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. செயற்கைகோள் திட்டத்தின் ஒரு அங்கமாக கவோஷ்-1 என்ற ராக்கெட் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கவலை தெரிவித்தன. இந்த நிலையில் நேற்று கவோஷ்-2 ராக்கெட் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் ஈரானிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு இதுபோல மேலும் 2 சோதனைகள் நடத்தப்படவேண்டும் என்று ஈரான் கூறிஉள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி ஈரான் போலி சாட்டிலைட் ஒன்றை ராக்கெட்டில் வைத்து பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பி சோதனை நடத்தியது. செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு நீண்ட தூரம் பாயும் ராக்கெட் தொழில் நுட்பம் பயன்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply